ஒரு வழியாக ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட சூரியின் கருடன் படக்குழு!

vinoth

சனி, 11 மே 2024 (07:41 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இதனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக சொல்லப்பட்டது.

இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலைடில் மார்ச் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்போது மே மாதத்தில் இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்