விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

வியாழன், 20 ஜூலை 2017 (19:54 IST)
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில், ஹீரோயினாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.


 
 
அட்லீ இயக்கும் ‘மெர்சல்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய்யின் 61வது படம் இது. அவரின் அடுத்த படத்தை, அதாவது ‘விஜய் 62’ படத்தை இயக்கப் போவது ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்பது முடிவாகிவிட்டது. இந்தப் படத்தை, ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது.
 
ஆனால், விஜய் 50 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸ் 40 கோடியும் சம்பளம் கேட்டதால், லைகா நிறுவனம் விலகிக் கொண்டது. இந்நிலையில், அந்தப் படத்தைத் தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள். ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்