இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இப்போது படத்தில் இருந்து ஜோதிகா வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதில் சினேகா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சினேகாவும் விஜய்யும் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் வசீகரா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.