சினேகன் - கன்னிகா ரவி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva

வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:09 IST)
பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா ரவி தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் கன்னிகா கர்ப்பமாக இருந்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் சமீபத்தில் கன்னிகா ரவிக்கு பிரசவம் நடந்த நிலையில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவலை சினேகன் மற்றும் கன்னிகா ரவி தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பதிவில் கூறியிருப்பதாவது:
 
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...
 
தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் ...
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...
 
இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது ...
 
உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.????
 
என்றும் அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன் .
 
Edited by Siva
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்