சிவகார்த்திகேயனோடு இணையும் முன்னணி இயக்குனர்… ஆச்சர்ய கூட்டணி!

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:16 IST)
இயக்குனர் கௌதம் மேனன் தொடர்ந்து இப்போது படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

இயக்குனர் கௌதம் மேனன் பல கோடி கடன் பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்குக் கை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புக் கொடுத்து வருகிறார் கணேஷ். இப்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்நிலையில் அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தையும் கௌதம் மேனனையே இயக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். விரைவில் இந்த வினோத கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்