பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துவரும் திரைப்படம் சிவகுமாரின் சபதம். இந்த படத்தை அவரே தயாரித்து, இசையமைத்து, இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் மாதுரி என்பவர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் விஜே பார்வதி உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே நான்கு பாடல்கள் வெளியாகி விட்ட நிலையில் ஐந்தாவது பாடலான மிடில் கிளாஸ்டா என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது