சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் எப்போது?

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:06 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியோபாஷாப்கா நடிக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்