ஃபெப்ரவரி 27 வெளியாகும் சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை

வியாழன், 29 ஜனவரி 2015 (11:14 IST)
காமெடி, ரொமானஸ் என்று பாதுகாப்பான வளையத்தில் பந்து விளையாடிய சிவ கார்த்திகேயன் முதல் முறையாக ஆக்ஷன் என்ற ஃபயர் வளையத்துக்குள் வித்தை காட்டியிருக்கும் படம், காக்கி சட்டை.
எதிர்நீச்சல் டீம் அப்படியே காக்கி சட்டை படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹீரோயின் ப்ரியா ஆனந்துக்குப் பதில் ஸ்ரீதிவ்யா.
 
யு சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் தயாரித்தது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளார். 
 
அடுத்த மாதம் 27 -ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்