சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா!
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (17:54 IST)
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனின் எஸ்கே 13 படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தை எம்.ராஜேஸ் இயக்க உள்ளார். ஹிப்பாப் தமிழன் ஆதி இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரான சதீசும் இப்படத்தில் நடிக்கிறாரார்.
இந்நிலையில் வேலைக்காரனில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, இந்த புதிய படத்திலும் ஜோடியாக நடிக்க உள்ளார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.