மகனுக்கு சிவகார்த்திகேயன் வைத்த பெயர்!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:24 IST)
பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை கடந்த மாதம் 12ஆம் தேதி பிறந்தது. ஆண் குழந்தையான இந்த குழந்தை பிறந்ததை அடுத்து தனது தந்தையே தனக்கு மகனாக பிறந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குழந்தையின் கை தனது விரலை பிடித்து இருந்தது போல ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என்ற பெயரை வைத்துள்ளார். சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்ற நிலையில் தந்தையின் பெயருடன் குகன் என்பதையும் இணைத்து தனது மகனுக்கு பெயராக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது என்பதும் அந்த குழந்தை சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மகன் பெயரான குகன் தாஸ் என்ற பெயரை அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் பதிவுசெய்து வைரலாகி வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்