சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிவரும் படம் ‘வேலைக்காரன்’. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, வில்லனாக நடிக்கிறார் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில். சினேகா, பிரகாஷ் ராஜ், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். 24 ஏஎம் ஸ்டியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு, தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அங்கும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளனர். ஷூட்டிங் அங்கு நடப்பதைத் தெரிந்து கொண்டவர்கள், தங்கள் குடும்பத்துடன் சிவகார்த்திகேயனைச் சந்திக்க ஆசைப்பட்டிருக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்த ஒரு மாலைவேளையில், அவர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.