எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேப்பேன்… வித்தியாசமான மாவீரன் பட டிரைலர்!

திங்கள், 3 ஜூலை 2023 (07:25 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

மாவீரன் திரைப்படம் தெலுங்கிலும் மாவீரடு என்ற பெயரில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது.

படத்தின் டிரைலர் பயந்தாங்கொள்ளியான ஹீரோ சிவகார்த்திகேயன், ஒரு அமானுஷ்ய சக்தியால் உந்தப்பட்டு சண்டைகளில் ஈடுபடுவது போல நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்