கூட்டணி சேரும் அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (23:59 IST)
தல அஜித் ரசிகர்களின் கூட்டம் சேர்ந்தாலே ஒரு திருவிழா கூட்டத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த நிலையில் விவேகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களோடு சிவகார்த்திகேயன் ரசிகர்களுடம் கூட்டணி சேரவுள்ளதால் திரையரங்குகள் களைகட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.



 
 
ஆம், அஜித்தின் விவேகம் படத்தின் இடைவேளையின்போது சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' டீசர் திரையிடப்படவுள்ளது. இதற்கான அனுமதியை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுவிட்டது.
 
எனவே ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் அஜித்தின் திரைப்படம் எங்கெங்கெல்லாம் ரிலீஸ் ஆகின்றதோ, அந்த திரையரங்குகள் அனைத்திலும் 'வேலைக்காரன்' டீசர் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 'வேலைக்காரன்' டீசர் இணையதளங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது என்பது தெரிந்ததே.

வெப்துனியாவைப் படிக்கவும்