மாவீரன் படத்தை குறுகிய நாட்களில் முடிக்கும் சிவகார்த்திகேயன்!

வியாழன், 13 அக்டோபர் 2022 (16:14 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இந்த மாத இறுதியில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் விருமன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து முடிக்க, படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். இந்த மாத இறுதியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மற்ற காட்சிகளை இயக்குனர் படமாக்க உள்ளார் என்றும் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்