கடன் மேல் கடன்… ‘சர்வர் சுந்தரம்’ வெளியாவதில் சிக்கல்?

சனி, 17 மார்ச் 2018 (11:35 IST)
தயாரிப்பாளர் கடன் மேல் கடன் வாங்கியுள்ளதால், ‘சர்வர் சுந்தரம்’ வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
 


ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. ஹீரோயினாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், இன்னும் ரிலீஸாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது இந்தப் படம். காரணம், தயாரிப்பாளர் வாங்கியிருக்கும் கடன் தான் என்கிறார்கள்.

படத்தின் மீது செல்வகுமார் நிறைய கடன் வாங்கியிருப்பதால், பைனான்சியர் படத்தின் மொத்த உரிமையையும் எழுதி வாங்கிக் கொண்டார். அவர் படத்தை வெளியிட முயற்சிக்கும்போதுதான், வெளிநாட்டு உரிமையை செல்வகுமார் இன்னொருவருக்கு விற்றுவிட்ட உண்மை தெரியவந்துள்ளது. ஆனால், மொத்த உரிமையும் தனக்குத்தான் வேண்டும் என பைனான்சியர் ஆவேசப்பட, விஷயம் பஞ்சாயத்துக்குப் போயிருக்கிறது. வெளிநாட்டு உரிமைகளை வாங்கி வெளியிடுவதற்கு என்று ஒரு அமைப்பு இருக்கிறது. நடிகர் அருண்பாண்டியன் தான் அந்த அமைப்பின் தலைவர். அங்கு பஞ்சாயத்து முடிந்து செட்டில் ஆனால் தான் பிரச்னை தீரும். அதன்பிறகே ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸாகும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்