தீபாவளி ரிலீஸைக் குறிவைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்?... லேட்டஸ்ட் அப்டேட்

சனி, 15 ஏப்ரல் 2023 (08:00 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் அயலான் படத்தின் ரிலீஸ் பற்றி சமீபத்தில் பேசிய சிவகார்த்திகேயன் “அயலான் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அயலான் படம் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இந்த படத்தின் தயாரிப்பாளர்களான R D ராஜா மற்றும் கே ஜே ஆர் ராஜேஷ் ஆகியோர் சந்தித்து படம் சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்