சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ரெமொ. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற ஜுலை 1-ந் தேதி இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.