தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிம்ரன்:வைரல் புகைப்படம்

புதன், 5 மே 2021 (20:06 IST)
தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிம்ரன்:வைரல் புகைப்படம்
கடந்த 2000 ஆண்டுகளில் அஜித் விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன் 
 
சமீபத்தில் கூட அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்தார் என்பதும் இதனையடுத்து தற்போது அவர் பிரசாந்த் நடித்து வரும் ’அந்தகன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் சிம்ரன் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிம்ரன் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
சிம்ரன் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்