சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறிய சிம்ரன் – இணையத்தில் வெளியான புகைப்படம்!

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (11:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சிம்ரன் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

90 களின் பிற்பகுதியிலும் 2000 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமா கொண்டாடிய நடிகையாக சிம்ரன் வலம்வந்தார். ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்த அவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். அதன் பின்னர் சில வருட இடைவெளிக்குப் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்போது நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்