குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் ஓடு ராஜா ஓடு. இப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சாருஹாசன், நாசர், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லட்சுமி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.