இதற்கிடையே நேற்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிம்பு பேசியதாவது " எனக்கு தேவைப்பட்டது. அது முடிந்ததும் இப்போது திரும்பி வந்துவிட்டேன். பையன் சிம்புவின் ரசிகனாக இருந்தால் பெண்கள் தைரியமாக கண்ண முடிக்கொண்டு காதலிக்கலாம். காரணம், ஊரே ஒருவனை கழுவி ஊத்தும்போதும், இவன் காலி என்று சொல்லியபோதும் அவனை விட்டு போகாமல் அவனுக்கு துணையாக நின்றவர்கள் சிம்பு ரசிகர்கள். எனவே அவர்கள் தான் கட்டிய பெண்ணையும், காதலித்த பெண்ணையும் எந்த நிலையிலும் விட்டுட்டு போகவே மாட்டார்கள் என கூறினார்.