சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் எடிட்டர் அறிவிப்பு!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:02 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் மார்ச் முதல்வாரத்தில் அவர் பத்து தல என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில் மார்ச் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள உள்ளார் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல எடிட்டர் பிரவீன் கே எல் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் பணிபுரிந்தார் என்பதும் அந்த படத்தை சூப்பராக எடிட் செய்வதன் மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்