சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள்.
ஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத் சிம்புவுடன் டின்னர் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சிம்பு, மகத் இருவரையும் திட்டி வருகின்றனர். அவற்றில் சில கமெண்ட்டுக்கள் உங்கள் பார்வைக்கு....