வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு: உருவாகிறது ‘இம்சை அரசன் புலிகேசி 2’?

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:55 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து இயக்க சிம்புதேவன் திட்டமிட்டு இருந்தார் என்பதும் ஆனால் இந்த படம் தொடங்கும் என்று வடிவேலு உடன் அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த படம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம்  பாகத்தை உருவாக்க தற்போது சிம்புதேவன் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்