முன்னாள் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிம்பு
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:27 IST)
நடிகை ஹன்சிகா இன்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து ரோமியோ ஜூலியட்,வேலாயுதம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஒரு காலத்தில் ஹன்சிகாவுடன் காதலில் இருந்த நடிகர் சிம்புவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ஹன்சிகா பதிலளித்துள்ளார். இது திரையுலகை சேர்ந்த பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.