இப்போது தெலுங்கில் சிம்பு நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு!

திங்கள், 24 ஏப்ரல் 2017 (13:23 IST)
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.  நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 
இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வருகிற மே மாதத்தில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படவுள்ளனர். தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையாக உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்