சில்வஸ்டர் ஸ்டோலன் நடிக்கும் ‘சமாரிட்டன்’…. நேரடி ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

புதன், 13 ஜூலை 2022 (15:57 IST)
ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்துள்ள திரைப்படம் ‘சமாரிடன்’

1982-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘First Blood’. ராம்போ என்று அழைக்கப்படும் இந்த படத்தை கதை எழுதி, தயாரித்து, நடித்தும் இருந்தார் சில்வஸ்டர் ஸ்டாலோன். இது சில்வஸ்டர் நடித்த முதல் படம் என்றாலும் ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்டது. ஹாலிவுட்டுக்கு பிறகு அதிகம் ஓடியது தமிழ்நாட்டில்தான். இந்த படத்திற்கு பிறகு சில்வஸ்டருக்கு வெறித்தனமான தமிழ் ரசிகர்கள் உருவானார்கள்.

இதையடுத்து பல ஆக்‌ஷன் படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்தார். சமீபத்தில் எக்ஸ்பேண்டபிள்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தும் சில படங்களை இயக்கியும் வந்த அவரின் சமீபத்தைய படமாக ‘சாமாரிட்டன்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக ப்ரைம் வீடியோவில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரீமியர் ஆக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்