75 லட்சம் சம்பாதித்த தெலுங்கு எனக்குள் ஒருவன்

செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (12:31 IST)
கன்னடத்தில் வெளியான லூசியா திரைப்படம் தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் எடுக்கப்பட்டதும், கன்னடப் படம் பிடித்து, எனக்குள் ஒருவனில் சித்தார்த் நடித்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், படம் எதிர்பார்த்தபடி போகவில்லை.
இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. தற்போது படத்தின் தெலுங்கு மொழிமாற்றத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை மா தொலைக்காட்சி 75 லட்சங்களுக்கு வாங்கியுள்ளது. 
 
சித்தார்த்தின் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு கிடைக்கும் விலையைவிட குறைவுதான். ஆனாலும், நஷ்டத்தில் லாபம் என்றுதான் இந்த 75 லட்சத்தை சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்