“சமூகத்தை திருத்த படம் எடுக்கவில்லை…” சித்தா பட நிகழ்வில் சித்தார்த் பேச்சு!

சனி, 7 அக்டோபர் 2023 (07:26 IST)
சித்தார்த் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்போது பிற மொழிகளிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் கடந்தவார இறுதியில் மட்டும் சுமார் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து இப்போது பிக்கப் ஆகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சித்தார்த் “இந்த படம் இயக்குனர் அருண்குமாரின் படம்.  வெற்றி, தோல்வி பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த படத்தை அதன் கதைக்காகவே நாங்கள் எடுத்தோம். நாட்டை திருத்தவோ, சமூகத்தை மாற்றவோ இந்த படத்தை எடுக்கவில்லை. நல்ல விஷயம் ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதை தெரியப்படுத்த விரும்பினோம்” எனப் பேசியுள்ளார். விரைவில் சித்தா திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்