பார்க்குற பார்வையே சரியில்லையே... மாடர்ன் கிளாமர் காட்டி மொக்க வாங்கிய ஸ்ருதி ஹாசன்!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:50 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ பாப் சிங்கர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிரேசி போஸ் கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது கருப்பு வெள்ளையில் லிமிட்டான கிளாமர் காட்டி போஸ் கொடுத்த கிரேசி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அப்படி பார்க்காதமா பயமா இருக்கு என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்