இப்புத்தகத்தில்,ஒரு இயக்குநரை பட வாய்ப்புக்காகச் சந்தித்துள்ளதாகவும், அதற்கு அந்த இயக்குநர் அவரிடம்,உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க வேண்டும், பின்னழகை மெருகேற்ற வேண்டுமெனக் கூறியதாகவும், இதற்காகத் தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் சென்றால் அவர் இதைச் சரி செய்துவிடுவதாகத் தெரிவித்ததாகவும் அவரது பேச்சு தனக்கு எரிச்சல் மூட்டியதாகக் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
மேலும், சல்மான் கான் படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடும் போது அப்படத்தின் தயாரிப்பாளர், உள்ளாடை தெரிய நடனமாட வேண்டுமென கூறிய விதம் தன் மனதைக் காயப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் memeor unfinished என்ற தனது சுயாரிதைப் புத்தகம் குறித்துப் பகிர்ந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் உள்ள சுயபரிசோதனை மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறந்துள்ளது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.