தமன் இசையமைக்கும் இந்தப் படம் மியூஸிகல் ட்ரீட்டாக தயாராகிறது. ஏற்கனவே லட்சுமி மேனன், ஆண்ட்ரியா, அனிருத் போன்ற பாடகரல்லாத பிரபலங்களும், மோஹித் சவ்கான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங் போன்ற பிரபல பாடகர்களும் பாடியுள்ளனர்.
இந்நிலையில், இசையமைப்பாளரும், முன்னணி பாடகருமான சங்கர் மகாதேவனும் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல் நேற்று மும்பையில் பதிவானது. பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கெனவே ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.