''இந்தியன்'' படத்தின் 3 வது பாகம் உருவாகிறதா? வெளியாகும் தகவல்

திங்கள், 24 ஜூலை 2023 (14:12 IST)
ஷங்கர் –கமல்ஹாசன் இணைந்துள்ள இந்தியன் படத்தின் 3 வது பாகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகிறார்.  இப்படத்தில் கமல்ஹாசனோடு, எஸ் ஜே சூர்யா,
சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில்  சமீபத்தில் இப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையிடும் புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தற்போது வெளியிட்டார்.

இப்படத்தின் காட்சிகளை ஷங்கர் பார்த்த நிலையில், இதில் 6 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் உள்ளதாகவும், இதை 3 மணி நேரத்திற்கு சுறுக்குவதைக் காட்டிலும், இன்னொரு பாகமாக உருவாக்கலாமா என்று இயக்குனர் ஷங்கர் யோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில், இந்தியன் 2 படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை  நெட்பிளிக்ஸ் ரூ.200 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்