வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது. இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக வடிவேலு மற்றும் லைகா அதிபர் சுபாஷ்கரன் சந்திப்புக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. லைகாவின் இழப்புக்கு வடிவேலு படங்கள் நடித்துத் தர ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக ஷங்கர் செலவு செய்த 3 கோடி ரூபாய்க்கு வடிவேலு எந்த பதிலும் சொல்லவில்லையாம். இதனால் ஷங்கர் அடுத்ததாக நடவடிக்கை எதாவது மேற்கொள்வாரா என தெரியவில்லை.