தான் எடுத்த புகைப்படங்களைக் கண்காட்சியாக்கிய ஷாமிலி… கலந்துகொண்ட பிரபலங்கள்!
சனி, 24 ஜூன் 2023 (13:07 IST)
நடிகை ஷாலினியின் தங்கையும், நடிகர் அஜித் மச்சினியும்மான ஷாமிலி வீர சிவாஜி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அஞ்சலி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
ஆனால் வீரசிவாஜி படத்துக்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. போட்டோகிராபியில் ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய புகைப்படங்களை எல்லாம் சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார்.
அதில் ஷாலினி அஜித் தன்னுடைய குழந்தைகளோடு கலந்துகொண்டார். மேலும் மணிரத்னம், சுஹாசினி மற்றும் ஏ ஆர் ரஹ்மான் குடும்பத்தினர் கலந்துகொண்டு கண்காட்சியை பார்த்து சென்றனர்.