சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்துச்சு. 15-வது வயசுல இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன் என்றார்.