ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் உருவான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் 1000 வாரங்கள் ஓடி சாதனைப் படைத்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டோடு அந்த படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இப்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த படத்தை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளது மராத்தா மந்திர் திரையரங்கம். இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் ரிலிஸ் செய்வது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.