அதை தொடர்ந்து அந்த படத்தில் ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் வைத்து அழைத்து செல்லும் காட்சி மீம் மெட்டீரியலாக மாறி வைரலாகியுள்ளது. அதில் பலரது முகங்களையும் இணைத்து, வாகனத்தை மாற்றி என பல்வேறு மீம்களால் சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அப்படத்தில் டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல், அதில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த ஜி.எம்.சுந்தரை சைக்கிளில் அழைத்து செல்லும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்!!!” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.