செல்வராகவனின் "நெஞ்சம் மறப்பதில்லை" ப்ரோமோ ரிலீஸ்

வியாழன், 4 மார்ச் 2021 (13:46 IST)
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்ததால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
 
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மார்ச் 5ஆம் தேதி இந்தப் படம் உறுதியாக ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. ஆனால் நேற்று திடீரென நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தடைகளை தகர்த்து நாளை திட்டமிட்டபடி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரமோஷனுக்காக புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  இந்த காட்சியில் எஸ்.ஜ சூர்யாவின் நடிப்பு வழக்கம் போலவே வேற லெவலில் இருக்கிறது. 

Oru Manushann Evlo Thaanya Kasta Padrathu... #NenjamMarappathillai from #March5th at your Theaters near you @selvaraghavan @Madan2791 @iam_SJSuryah @ReginaCassandra @Nanditasweta @Arvindkrsna @editor_prasanna @kbsriram16 @APVMaran @RIAZtheboss @teamaimpr pic.twitter.com/b3AHlTR1gU

— RockFort Entertainment (@Rockfortent) March 3, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்