உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பரவலாக பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இதையடுத்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ள டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழம் தருணத்தை எதிர்நோக்கி.... வாழ்த்துகள்.” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் சார்பாக பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார்.