சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
இந்த படம் 2020 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் சில பிரச்சனைகளால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்போது ரிலீஸ் பணிகளை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொடங்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி படத்தை வடிவேலு, பிரபுதேவா மற்றும் மம்மூட்டி ஆகியோரிடம் சொல்லி அவர்கள் அதற்கு என்ன பதிலளித்தார்கள் என்பதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.