அஜித்தின் விவேகம் படத்தின் பெயருக்கு பின்னால் உள்ள ரகசியம்!!

புதன், 29 மார்ச் 2017 (14:56 IST)
இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். அஜித்தின் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.


 
 
தற்போது அஜித் கதாபாத்திரத்தின் பெயர் பற்றி ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. விவேகம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு விவேக் என பெயரிடப்பட்டுள்ளது.
 
விவேக் என்ற பெயர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. நகைச்சுவை நடிகர் விவேக், பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரம் விவேக் என அனைத்தும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவை.
 
இதேபோல் துப்பறியும் கதைதான் விவேகம் என்பதால் படத்தில் அஜித்துக்கு விவேக் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
அஜித்தின் பெயரை வைத்து தான் விவேகம் என்ற டைட்டிலையே தேர்வு செய்திருக்கிறார்கள் பட குழுவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்