ஈழ விடுதலை ஆதரவு கூட்டங்களிலும் அவரோடு நான் கலந்து கொண்டிருக்கிறேன். அரசியலில் நேர்மையும் கொண்ட கொள்கையில் உறுதியும் கொண்டவர். அவருடைய இழப்பு பெரிய இழப்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, மரியாதையின் காரணமாக என்னுடைய இனிய நண்பர் மணிவண்ணன் இயக்கத்தில் நான் நடித்த ஒரு படத்திற்கு தோழர் பாண்டியன் என்று பெயரிட்டு மகிழ்ந்தோம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் போராளி இழந்தது மிகவும் வருந்தத்தக்க விஷயம். அவருடைய குடும்பத்தாருக்கும் பொதுவுடமை தோழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்