கமல்ஹாசன் 233 பட கேமரா மேன் இவரா? வெளியாகும் தகவல்

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:50 IST)
உலகநாயகன் கமல்ஹாசனின்  233 என்ற படத்தின் கேமராமேன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 

ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கு பின், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில்  உருவாக இருக்கும் திரைப்படம்  கமல் 233.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமலஹாசன் இந்த படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், கமல்- ஹெச்.வினோத் இணையவுள்ள கமல் 233 படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யசூரியன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவர் ஏற்கனவே தீரன் அதிகாரன் ஒன்று படத்தில் பணியாற்றியுள்ளார். அதேபோல், காத்தியின் ஜப்பான் படத்திற்கு பெரும்பாலான ஒளிப்பதிவை சத்யன் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்