சசிகுமார் நடித்த ‘காரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (20:10 IST)
சசிகுமார் நடித்த காரி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் நவம்பரில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் இந்த திரைப்படம் நவம்பர் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
சசிகுமார் ஜோடியாக பார்வதி நடித்துள்ள இந்த படத்தில் அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்ல்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹேமந்த் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்