அவர் செய்த உதவியை கடனாக அடைச்சிடுவேன் - சசிகுமாரின் உதவியால் மனம் நெகிழ்ந்த விவசாயி!

வெள்ளி, 8 மே 2020 (20:17 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது. இதையடுத்து இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர். மேலும், அஜித், விஜய், ரஜினி
 
, சூர்யா, தனுஷ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர்.

அப்படித்தான் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாழை தோப்பு விவசாயி கோபாலகிருஷ்ணன், தனது நிலத்தில் விளைந்துள்ள வாழை தாரை அறுவடை செய்ய வழியின்றி தவித்து வருவதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.அதில்,  "வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்" எனக் கதறுகிறார். அந்த வீடியோவை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விடியோவை பார்த்த நடிகர் சசிக்குமார் உடனடியாக அந்த விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்துள்ளார். இதனால் மனம் நெகிழ்ந்த அந்த விவசாயி " , ‘சசி சார் உதவியா கொடுத்தாலும், அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்கு திருப்பிக் கொடுப்பேன்’ என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்" எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் pic.twitter.com/4euU7qBcqe

— இரா.சரவணன் (@erasaravanan) April 16, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்