மீண்டும் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆகின்றாரா சர்வானந்த்? ஹிட் பட நடிகை ஜோடி!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:42 IST)
மீண்டும் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆகின்றாரா சர்வானந்த்?
’எங்கேயும் எப்போது’ என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் சர்வானந்த் அந்தப் படத்துக்குப் பின்னர் அவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. இருப்பினும் சர்வானந்த்துக்கு என தெலுங்கில் ஒரு மார்க்கெட் உள்ளது. அங்கு பல ஹிட் படங்களை அவர் தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார்
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வானந்த் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ரிதுவர்மா சமீபத்தில் வெளியான ஹிட் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. இந்த படத்தை இயக்கவிருப்பவர், தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்