காலா சாதனையை காலி செய்த சர்கார்

புதன், 7 நவம்பர் 2018 (09:31 IST)
சென்னையில் காலா படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை நேற்று வெளியான சர்கார் படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் காலா திரைப்படம் கடந்த ஜூன் 7ந் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். 120 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகமெங்கும் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.76 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதற்கு முன்னர் 1.52 கோடி வசூல் செய்து மெர்சல் படம் முதல் இடத்தில் இருந்தது
 
இந்நிலையில் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 57 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. எதிர்பார்த்தபடியே படம் பக்கா மாஸ் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்று ஒரு நாளில் சென்னையில் மட்டும் சர்கார் திரைப்படம் ரூ. 2.37 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதன்மூலம் விஜயின் சர்கார் திரைப்படம் காலா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. மெர்சலையடுத்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் விஜய். இது விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்