அதையடுத்து விஜய் நடித்த பைரவா, ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா, தனுஷ் நடித்த கொடி ஆகிய படங்களு தொடர்ச்சியாக இசையமைத்து தமிழ் சினிமாவின் மிகசிறந்த இசையமைப்பாளர்களும் ஒருவராக தென்படுகிறார்.
அந்தவகையில் தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 படத்திற்கு இசையமைத்துள்ளார் இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக மாணவர்களின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் "உலகத்தை பசுமையாக மாற்ற வேண்டும், சுத்தமான தண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும், நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் ஒழிக்கவேண்டும். இந்த மூன்று விஷயங்களை செய்துவிட்டு இறந்துவிட வேண்டும் என ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.