மாறுவேடத்தில் சென்று ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் பார்த்தாரா சந்தானம்?

செவ்வாய், 29 மார்ச் 2022 (18:41 IST)
பிரபல நடிகர் சந்தானம் மாறுவேடத்தில் சென்று எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை சென்னை திரையரங்கில் பார்த்ததாக கூறப்படுகிறது. 
 
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை பல திரையுலக நட்சத்திரங்கள் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தியேட்டரில் ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க நடிகர் சந்தானம் மாறுவேடத்தில் சென்று பார்த்ததாக இயக்குனர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார் 
தற்போது சந்தானம் நடித்து வரும் குலுகுலு என்ற திரைப்படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்